LATEST NEWS
பரபரப்பு..! “ஏரியில் கிடந்த எலும்புக்கூடு” செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திடீர் திருப்பம்… அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணிகள் 33 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செஞ்சி பரதன்தாங்கல் ஏரி அருகே மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது மாயமான சிறுமியைக் கண்டுபிடிக்க, சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, செஞ்சி அடுத்த சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி மாயமான பகுதிக்கு அருகிலுள்ள பரதன்தாங்கல் ஏரியின் முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த தடயவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வனப்பகுதியில் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா எனப் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
