CRIME
“5000 ரூபாய் பணமும், ஒரு பொட்டலம் கஞ்சாவும்…” சினிமா பாணியில் நடந்த துப்பாக்கிச் சண்டை.. சிக்கிய முக்கிய குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி பகுதியில் குரூசர் வாகனத்தில் கால்நடைகளைக் கடத்த முயன்ற வாரணாசியைச் சேர்ந்த சூர்யா படேல் என்பவரைப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்துள்ளனர். கால்நடை கடத்தல் கும்பலைத் தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் சூர்யா படேல் சிக்கிய நிலையில், அவருடன் இருந்த விகாஸ் சவுகான், பாபு யாதவ், சந்து யாதவ் மற்றும் சிவகுமார் சோன்கர் ஆகிய நான்கு கூட்டாளிகள் இருளைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஐயாயிரம் ரூபாய் பணத்திற்காகவும் கஞ்சா புகைப்பதற்காகவும் ஆசைப்பட்டுத் தான் இந்தக் கால்நடை கடத்தல் கும்பலில் இணைந்ததாக சூர்யா படேல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சூர்யா படேலைக் கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய நான்கு குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
