“மனிதநேயமற்ற செயல்.. ” வயதானவர்கள் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கிய டெலிவரி ஊழியர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனிதநேயமற்ற செயல்.. ” வயதானவர்கள் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கிய டெலிவரி ஊழியர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் சாரதா அடுக்குமாடிக் குடியிருப்பில், பார்சலை வாங்க மறுத்த ஆத்திரத்தில் வயதான தம்பதியினரை டெலிவரி ஊழியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி பூஜை தினத்தன்று, அந்த முதிய தம்பதியினரின் வீட்டிற்குப் பார்சல் கொண்டு சென்ற டெலிவரி ஊழியர், அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்ததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த டெலிவரி ஊழியர் வயதான தம்பதியினர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தப் பகீர் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in