அய்யோ கடவுளே.. தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த வெறிச்செயல்.. கால்வாயில் கிடந்த சடலம்.. விசாரணையில் அதிர்ச்சிப் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கடவுளே.. தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த வெறிச்செயல்.. கால்வாயில் கிடந்த சடலம்.. விசாரணையில் அதிர்ச்சிப் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள பிலுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 42 வயதான ராம்சேவக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி சீமாவை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ராம்சேவக், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது சொந்த கிராமமான பத்வாஸிற்கு வந்திருந்தார். கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நக்லா குலர் மற்றும் கம்பீர்பூர் இடையேயுள்ள நெடுஞ்சாலையோரக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக ராம்சேவக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சீமா, உறவினரான ஆகாஷ் என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு அவருடன் வசித்து வந்தது தெரியவந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஆகாஷுடன் சேர்ந்து சீமா தனது கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சீமாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ஆகாஷைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in