“இலவச அரசு வீடு என ஆசை வார்த்தை கூறி..” குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. காமக்கொடூரனின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இலவச அரசு வீடு என ஆசை வார்த்தை கூறி..” குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. காமக்கொடூரனின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் கோட்வாலி பகுதியில், அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக நம்பவைத்துப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்த அப்பெண்ணை, அனில் குமார் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், அக்டோபர் 30-ஆம் தேதி ஒரு காலி இடத்தைக் காண்பித்து அங்கு இலவசமாக வீடு கட்டித் தரப்படும் என நம்பவைத்த அவர், நவம்பர் 5-ஆம் தேதி அரசு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி அப்பெண்ணை ஒரு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு அப்பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் சுயநினைவை இழந்த பிறகு அனில் குமார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்தக் கொடூரச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அவர், இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அனில் குமாரைக் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in