“அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி..” இனி இலவச மூவி டிக்கெட் கிடையாது… கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி..” இனி இலவச மூவி டிக்கெட் கிடையாது… கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்..!!

Published

on

ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும். பல பிரபலமான கார்டுகளில் உள்ள சலுகைகளை இவ்வங்கி நிறுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் முன்பு இலவச காப்பீடு அல்லது திரைப்பட டிக்கெட்டுகளைப் பெற்று வந்திருந்தால், இனி உங்களால் அவ்வாறு பெற முடியாது.

எமரால்டு பிரைவேட் மெட்டல், டைம்ஸ் பிளாக், எமரால்டு, டைமண்ட், சஃபைரோ மற்றும் ரூபிஎக்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் வழங்கப்படும் விமான விபத்துக் காப்பீடு டிசம்பர் 15ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராக்ரம் செலக்ட் மற்றும் பராக்ரம் கிரெடிட் கார்டுகளில் வழங்கப்படும் தனிநபர் மற்றும் விமான விபத்துக் காப்பீடும் இனி கிடைக்காது. அதோடு, எமரால்டு பிரைவேட் மெட்டல், டைம்ஸ் பிளாக், எமரால்டு மற்றும் எமரால்டு பிரைவேட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பயண ரத்துகளுக்கான CFAR ரத்து செயல்முறைக்கான காப்பீடும் இந்தத் தேதியிலிருந்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

RubyX, Coral, Expressions, Chennai Super Kings, MakeMyTrip, மற்றும் HPCL போன்ற கார்டுகளில் வழங்கப்படும் இலவச INOX சலுகைகளும் டிசம்பர் 15 முதல் நிறுத்தப்படும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுடைய கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதை மாற்ற வேண்டியிருந்தால் டிசம்பர் 11 முதல் இதற்கான செலவும் அதிகரிக்கும். உங்களுடைய கார்டை மாற்றுவதற்கு இப்போது நீங்கள் 300 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு முன்பு, இதன் கட்டணம் ரூ. 200 (மற்றும் ஜிஎஸ்டி) ஆக இருந்தது. இருப்பினும், Emerald Private Metal, 1838 Reserve, மற்றும் Times Black கார்டுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வணிக மற்றும் பெருநிறுவன கிரெடிட் கார்டு பயனர்களுக்கான டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் கட்டணம் நவம்பர் 25 முதல் உயர்கிறது. அதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் இந்திய ரூபாயில் செய்யப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கும் அல்லது வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வணிகருக்கு இந்தியாவில் செய்யப்படும் பேமெண்டுகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டில் வரும் இந்த மாற்றங்களாலும் கட்டண உயர்வாலும் அதன் வாடிக்கையாளர்களின் செலவுகள் கனிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுடைய மாதாந்திர பில் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in