#BREAKING: தமிழ்நாடு முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவும்… சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

#BREAKING: தமிழ்நாடு முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவும்… சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Published

on

“நடைபாதை நடப்பதற்கே” என்ற அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஷாஜு அலெக்ஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலம் முழுவதும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளைத் தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்குக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in