“பல வருஷமா சுத்தியும் ஒன்னும் நடக்கல.. ஆனா 14 நாள்ல ஜாக்பாட்..!” சிமெண்ட் சுமந்த இளைஞரின் அழகான காதல் கதை.. இணையத்தைக் கலக்கும் ‘குல்லு’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பல வருஷமா சுத்தியும் ஒன்னும் நடக்கல.. ஆனா 14 நாள்ல ஜாக்பாட்..!” சிமெண்ட் சுமந்த இளைஞரின் அழகான காதல் கதை.. இணையத்தைக் கலக்கும் ‘குல்லு’..!!

Published

on

கட்டிட வேலைக்காகச் சென்ற இடத்தில் வெறும் 14 நாட்களில் வீட்டின் உரிமையாளர் மகளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ‘குல்லு’ என்ற இளைஞரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூலித் தொழிலாளியான குல்லு, அந்தப் பெண்ணின் வீட்டில் தொடர்ந்து 14 நாட்கள் சிமெண்ட் மற்றும் ஜல்லி சுமக்கும் வேலை செய்துள்ளார். வேலை செய்து கொண்டிருந்தபோதே அந்த வீட்டிலிருந்த பெண்ணுக்கும் குல்லுவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. வேலை முடிந்த கையோடு, சற்றும் தாமதிக்காமல் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் பதிவுத் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

தற்போது இருவரும் கைகோர்த்தபடி நடந்து செல்லும் வீடியோக்களை வெளியிட்டு, “எங்கள் புதிய உலகில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், எங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று தங்கள் குடும்பத்தினருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். “பல வருடங்களாகச் சுற்றித் திரிந்தும் நமக்கு ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் குல்லு 14 நாட்கள் வேலையில் ஜாக்பாட் அடித்துவிட்டார், அதிர்ஷ்டம் என்றால் இதுதான்” என்று நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தை நகைச்சுவையாகவும் ஆச்சரியத்துடனும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in