LATEST NEWS
“அடேங்கப்பா… இதுதான் உண்மையான காதல்..!” மரணத்தின் விளிம்பில் நின்ற காதலன்.. மருத்துவ உலகையே மிரளச் செய்த காதலியை அசத்தியமான காரியம்.. நெட்டிசன்களை உருக வைக்கும் லவ் ஸ்டோரி..!!
அனன்யா மற்றும் சௌமன் இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில் சிறிய விஷயங்களுக்காகவும் சாதாரணமாகவும் உறவுகள் முறிந்து போகும் சூழலில், இவர்களின் காதல்கதை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு கல்லூரியில் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட இவர்களின் நட்பு, காலப்போக்கில் ஆழமான காதலாக மாறி 2020-ஆம் ஆண்டில் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் மகிழ்ச்சிகரமாக நடக்கவிருந்த வேளையில், 2026-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக சௌமனின் உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்குச் சென்றார்.
ये दोनों पश्चिम बंगाल के रहने वाले Ananya और Soumen हैं,
इनकी प्रेम कहानी आज के समाज के लिए एक Example हैं, जहां बात बात में रिश्ते टूट जा रहे हैं।
दोनों की जान पहचान 2017 में कॉलेज के दौरान हुई थी , 2020 में दोनों को प्यार हो गया ।
दोनों के परिवार वाले भी मान गए लेकिन 2026… pic.twitter.com/dtY96V2p9v— Prem Bhardwaj (@premkumarcbn01) August 16, 2026
மருத்துவர்களும் மக்களும் அவர் பிழைப்பது கடிதம் என்று கூறி விலகிச் செல்லுமாறு அனன்யாவுக்கு அறிவுறுத்தினர். ஆனால், எதையும் பொருட்படுத்தாத அனன்யா, சௌமனைக் கைவிடாமல் மிகுந்த தைரியத்துடன் அவரது அருகிலேயே நின்று முழு அர்ப்பணிப்புடன் கவனித்து வந்தார். அனன்யாவின் உறுதியான அன்பும் அக்கறையும் அற்புதங்களை நிகழ்த்தியது போல், சௌமனின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். இறுதியில், பல்வேறு சோதனைகளைக் கடந்து போராடி வென்ற இவர்கள் இருவரும், தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டு தங்களது காதலை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டனர்.
