LATEST NEWS
“என் அன்புத் தம்பி விஜய்” ஸ்டாலின் Uncle-ன்னா அவர் எனக்கு தம்பி தானே… கனிமொழி எம்.பி கொடுத்த திடீர் ஷாக்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதலமைச்சர் விஜயைக் குறிப்பிட்ட அவர், “என் அன்புத்தம்பி விஜய்” என்று கூறினார். மேலும், முதலமைச்சர் விஜய் தங்களது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை “Sweet Uncle” என்று நெஞ்சில் கை வைத்து அழைப்பதால், விஜய் தனக்கு தம்பி முறை வேணும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிர்வாகம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, தமிழகத்தில் தற்போதைய ஆட்சி முறையில் மாலை நேரங்களில் கடுமையான மின்தடை ஏற்படுவதாக கனிமொழி எம்.பி. சுட்டிக்காட்டினார். அத்தோடு, தற்போதைய சூழலில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் தமிழ்நாட்டில் போட்டியே நடப்பதாகக் கூறி அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
