கல்யாண வீட்டில் மரண ஓலம்.. மொட்டை மாடியில் டென்ட் போட்டபோது நேர்ந்த பயங்கரம்.. காப்பாற்ற ஓடிவந்த நபரும் பலி.. 3 பேரும் பரிதாப பலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கல்யாண வீட்டில் மரண ஓலம்.. மொட்டை மாடியில் டென்ட் போட்டபோது நேர்ந்த பயங்கரம்.. காப்பாற்ற ஓடிவந்த நபரும் பலி.. 3 பேரும் பரிதாப பலி..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் டக்ஷின் டோலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொம்னுபுரா இஸ்லாமாபாத் பகுதியில், திருமண வீடொன்றில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருந்தது. அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் கூடாரம் அமைக்கும் பணியில் இர்ஃபான் மற்றும் காமில் ஆகிய இரு தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, அவர்கள் கையாண்ட ஒரு இரும்பு ஆங்கிள் கம்பி, வீட்டிற்கு மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது உரசியது. இதில் பயங்கர மின்சாரம் பாய்ந்து, கூடாரம் அமைத்துக் கொண்டிருந்த இரு தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டு சுருண்டு விழுந்தனர்.

Advertisement

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருமண வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், உயிருக்குப் போராடிய அவ்விருவரையும் காப்பாற்றப் பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்து அவர்களைத் தொட முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரும் அந்த மின்சாரத்தில் சிக்கிக் கொண்டார். இந்த கொடூர சம்பவத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in