LATEST NEWS
இந்தியாவிலேயே முதல் முறையாக… தாயின் கருப்பையிலேயே 25 வார கருவில் இருந்த சிசுவின் முதுகுத் தண்டுவட அறுவைசிகிச்சை… 30 மருத்துவர்கள் சேர்ந்து நிகழ்த்திய அதிசயம்..!!
இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தாயின் கருப்பையிலேயே இருந்த சிசுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். 25 வார கருவில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்றவும், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கவும் இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருவிலிருந்த சிசுவுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான முதுகுத் தண்டுவடக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காக இந்தச் சிகிச்சை திட்டமிடப்பட்டது. இதற்காகத் தாயின் கருப்பையை மிக நுட்பமாகத் திறந்து, கருவிலிருந்த சிசுவுக்கு நேரடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கருப்பை மீண்டும் பாதுகாப்பாக மூடப்பட்டது.
சுமார் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர், தொடர்ந்து 6 மணி நேரம் போராடி இந்த அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் இந்தச் சாதனை, இந்திய மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய சான்றாகப் பார்க்கப்படுகிறது.
