என்ன இது..? குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்ற 24 வயது இளைஞர்.. வயிற்றுக்குள் இருந்த ‘அந்த’ உறுப்பைக் கண்டு உறைந்து போன மருத்துவர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன இது..? குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்ற 24 வயது இளைஞர்.. வயிற்றுக்குள் இருந்த ‘அந்த’ உறுப்பைக் கண்டு உறைந்து போன மருத்துவர்கள்..!!

Published

on

டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்ற 24 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரது வயிற்றுப் பகுதிக்குள் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்த அந்த வாலிபருக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. வெளிப்புறத் தோற்றத்தில் ஆண்மைக்குரிய அனைத்து உடல் அமைப்புகளும் சாதாரணமாகவே இருந்ததால், அவருக்கு எந்தவிதமான வெளிப்படையான அறிகுறியும் தெரியவில்லை.

அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவக் குழுவினர், உடலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவரது வயிற்றுக்குள் பெண்களுக்கு இருப்பதை போன்ற நன்கு வளர்ந்த கருப்பை, பலோபியன் குழாய்கள் மற்றும் விதைப்பையில் இருக்க வேண்டிய இரண்டு விரைகளும் வயிற்றுப் பகுதியிலேயே தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ உலகில் இது ‘பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்’ எனப்படும் மிக அரிய வகை மருத்துவக் குறைபாடாகும்.

Advertisement

வயிற்றுக்குள் இருக்கும் விரைகளால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதால், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அவரது கருப்பை மற்றும் 2 விரைகளையும் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இது போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் உடனடியாக இனப்பெருக்க ஹார்மோன் மருத்துவம் மற்றும் மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in