“என் புள்ள கிடைக்கும் வரை நகர மாட்டோம்..!” ஆசிரம வாசல் முன் கதறும் பெற்றோர்.. 3 மாதங்களாக மாயமான மகன்… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் புள்ள கிடைக்கும் வரை நகர மாட்டோம்..!” ஆசிரம வாசல் முன் கதறும் பெற்றோர்.. 3 மாதங்களாக மாயமான மகன்… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!!

Published

on

பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜாவின் சீடரான ரசிக துலாரி சரண் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணத்தைத் தொடர்ந்து, தற்போது உத்திரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸைச் சேர்ந்த அனுஜ் சவுத்ரி என்ற இளைஞர் ஆசிரமத்திலிருந்து மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ரஸின் சாதாபாத் பகுதியைச் சேர்ந்த 18 வயதான அனுஜ் சவுத்ரி, பிரேமானந்த் மகாராஜாவிடம் தீக்ஷை பெற வேண்டும் என்ற விருப்பத்துடன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு பிருந்தாவனத்திற்கு வந்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை; அவரது பெற்றோரினாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, காணாமல் போன அனுஜ் சவுத்ரியின் குடும்பத்தினரும் அவரது கிராமத்தைச் சேர்ந்த மக்களும் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜாவின் ஆசிரமத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது மகனைத் திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது அவன் எங்கு இருக்கிறான் என்பது குறித்த தெளிவான தகவலைக் கூற வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஆசிரமத்திற்குப் பலமுறை வந்து தகவல்களைக் கேட்க முயன்றும், அங்கிருந்த ஊழியர்களோ சேவை செய்பவர்களோ திருப்திகரமான எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்றும், தங்களை உள்ளே செல்ல விடுவதில்லை என்றும் அனுஜின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இதற்கு முன்னதாக, பிரேமானந்த் மகாராஜாவின் சீடரான ரசிக துலாரி சரண் (என்ற தீபக் லோதி) சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஜபல்பூரைச் சேர்ந்த இவர், ஆசிரமத்தில் தங்கி ஆன்மீகச் சேவையுடன் மின்சாரப் பணிகளையும் கவனித்து வந்தார். கடந்த செப்டம்பர் 25 அன்று ஆசிரமத்தின் நான்காவது மாடியிலிருந்து விழுந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்தின் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதால், காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in