CRIME
“அடப்பாவிங்களா..! காதலி கேட்டான்னு இப்படியா பண்றது..?” நள்ளிரவில் காரை வளைத்துப் பிடித்த போலீஸ்… பின் சீட் பெட்டியை திறந்ததும் உறைந்துபோன அதிகாரிகள்..!!
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நயன் ஜோஷி என்ற இளைஞர், விரைவாக பணக்காரராக மாறவும், தன் காதலியின் ஆடம்பரமான ஆசைகளை நிறைவேற்றவும் கள்ளநோட்டுகளை அச்சிடத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் சிறப்புப் காகிதங்கள் மற்றும் பிரிண்டரை வரவழைத்துள்ளார். டூங்கர்பூர் நகரின் வசுந்தரா விஹார் காலனியில் உள்ள வாடகை அறையில் நயன் ஜோஷியும், பாவேஷ் கதீக்கும் தங்கி, அங்குதான் இந்தக் கள்ளநோட்டுகளை அச்சிட்டு சந்தையில் புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு, நயன் ஜோஷியின் காதலி பெயரில் உள்ள ஒரு வங்கிச் கணக்கும் இதில் பயன்படுத்தப்பட்டதாகக் தெரியவந்துள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு மாடா பள்ளி மைதானத்தில் சிலர் கள்ளநோட்டுகளுடன் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல் அதிகாரி கைலாஷ் பஞ்சாரியா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகையிட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் மூன்று இளைஞர்கள் இருந்த நிலையில், இருளைப் பயன்படுத்தி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனையிட்டபோது, பின் இருக்கையில் இருந்த ஒரு பெட்டியில் 500 ரூபாய் நோட்டுகளின் 4 கட்டுகளும் (ஒவ்வொரு கட்டிலும் 200 நோட்டுகள்) மற்றும் 191 தனி நோட்டுகளுமாக மொத்தம் ரூ. 4,65,500 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் இருந்த நயன் ஜோஷி மற்றும் பாவேஷ் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய மாடாவைச் சேர்ந்த ராகுல் லபானா என்ற மூன்றாவது நபரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த நெட்வொர்க்கை முழுமையாகக் கண்டறிய மூன்று சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளநோட்டு தயாரிக்கத் தேவையான காகிதம், பிரிண்டர் போன்ற பொருட்களை அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள், இந்த சட்டவிரோதத் தொழில் எவ்வளவு காலமாக நடந்து வருகிறது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
