“2019-ல் இறந்த பெண்.. 2026-ல் உயிருடன் சிக்கியது எப்படி..?” கொலையாளி முத்திரை குத்தப்பட்ட இளைஞரின் போராட்டத்தால் வெளிவந்த பகீர் உண்மை.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“2019-ல் இறந்த பெண்.. 2026-ல் உயிருடன் சிக்கியது எப்படி..?” கொலையாளி முத்திரை குத்தப்பட்ட இளைஞரின் போராட்டத்தால் வெளிவந்த பகீர் உண்மை.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி மஞ்சுளா என்ற பெண் மாயமானார். அவர் கடைசியாகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ராஜேஷ் என்பவரது செல்போன் மூலம் அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து, ராஜேஷ்தான் மஞ்சுளாவைக் கொலை செய்துவிட்டதாகப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 2021 ஆகஸ்ட் மாதம் ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் தன்னைச் சிறையில் கடுமையாகச் சித்திரவதை செய்ததாக வேதனை தெரிவித்த ராஜேஷ், சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 2024 ஜனவரியில் ஜாமீனில் வெளியே வந்தார்.

தன் மீதான களங்கத்தைத் துடைத்து நிரபராதி என்பதை நிரூபிக்கத் தனது வழக்கறிஞர் நடேஷுடன் இணைந்து மஞ்சுளாவைத் தேடும் பணியில் ராஜேஷ் தீவிரமாக இறங்கினார். இதன் பலனாக, கடந்த நவம்பர் 11, 2026 அன்று மாயமான மஞ்சுளா உயிருடன் இருப்பதை வழக்கறிஞர் நடேஷ் கண்டறிந்தார். போலீசாரின் விசாரணையில், குடும்பத்தினர் நிச்சயித்த திருமணம் பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி நாகேந்திரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டில் வசித்து வந்ததாகவும், பின்னர் கர்நாடகா திரும்பியதாகவும் மஞ்சுளா வாக்குமூலம் அளித்துள்ளார். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பகட்ட விசாரணையில் தவறிழைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in