CRIME
“அடப்பாவி.. பட்டப்பகலில் ஜவுளிக்கடைக்குத் தீ வைத்த சிறுவன்..” கையில் தீக்காயத்துடன் போராடிய ஊழியர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மவானா பகுதியில், ஜவுளிக்கடை ஒன்றிற்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருந்த துப்பட்டாக்களுக்குச் சிறுவன் ஒருவன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 12-ஆம் தேதி பிற்பகல் 1:15 மணியளவில், அனுமன் கோயில் அருகே உள்ள கிருஷ்ணா புடவை ஷோரூமிற்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி, அங்கு வைக்கப்பட்டிருந்த துப்பட்டாக்களுக்குத் தீ வைத்துவிட்டு அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
உடனடியாகச் செயல்பட்ட கடை ஊழியர்களும் அப்பகுதி மக்களும் இணைந்து தீயை விரைவாக அணைத்ததால், கடை முழுவதும் தீ பரவிப் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்தத் தீயணைப்பு முயற்சியின்போது ஒருவருக்குக் கையில் லேசான தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த மவானா போலீசார், இஸ்லாமியா மதரஸா அருகே பதுங்கியிருந்த அந்தச் சிறுவனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
