உச்சகட்ட பதற்றம்.. நண்பர்களுடன் மலையேற்றம் சென்ற 19 வயது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட பதற்றம்.. நண்பர்களுடன் மலையேற்றம் சென்ற 19 வயது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள நைனா சிகரம் மலையேற்றப் பாதையில் 19 வயதான கல்லூரி மாணவர் அர்னவ் சிங் மாயமாகியுள்ளார். பீகார் மாநிலம் முங்கர் பகுதியைச் சேர்ந்த இவர், கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தனது மூன்று நண்பர்களுடன் நைனா சிகரத்திற்கு மலையேற்றம் சென்ற அர்னவ், மலையிலிருந்து திரும்பி வரும் வழியில் திடீரென மாயமாகியுள்ளார். அவர் மாயமாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காதது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தின் வெவ்வேறு மலையேற்றப் பாதைகளில் சென்ற ஓர் இளைஞரும் இளம்பெண்ணும் மாயமான நிலையில், அவர்களும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பாதைகளில் மலையேற்றத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் இவ்வாறு அடுத்தடுத்து மாயமாவதும், தேடுதல் வேட்டை நடத்தியும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் போவதும் அப்பகுதியில் பெரும் மர்மமாகவும் கேள்விக்குறியாகவும் நீடிக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in