“ஓராண்டு ஆன்லைன் காதல்..” திருமண ஆசையில் கடல் கடந்து பறந்து வந்த பெண்.. நேரில் வந்ததும் தெறித்து ஒடிய வாலிபர்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஓராண்டு ஆன்லைன் காதல்..” திருமண ஆசையில் கடல் கடந்து பறந்து வந்த பெண்.. நேரில் வந்ததும் தெறித்து ஒடிய வாலிபர்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

டேட்டிங் செயலி மூலம் பழகிய இளைஞரைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் கனடாவிலிருந்து ராஜஸ்தானின் நீம்ரானா பகுதிக்கு வந்த 61 வயது மூதாட்டி, அந்த இளைஞர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றமடைந்துள்ளார். இணையதளம் வழியாகத் தொடங்கிய இவர்களது நட்பை காதலாகக் கருதிய அப்பெண், சுமார் ஓராண்டு காலம் அந்த இளைஞருடன் தொடர்ந்து உரையாடி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்ததைத் தொடர்ந்து, அவர் கனடாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். ஆனால், நீம்ரானா வந்தடைந்து திருமண ஏற்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தபோது, அந்தப் பெண்ணின் வயதைக் காரணமாகக் காட்டி இளைஞர் திருமணம் செய்து கொள்ள திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. நிலைமை கைமீறியதை அடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண் உடனடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். தூதரக அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், அதிகாலை 4 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீம்ரானா காவல்துறையினர், அந்தப் பெண்ணை மீட்டுத் தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in