LATEST NEWS
வறுமையின் உச்சகட்ட அவலம்.. இன்னும் மூச்சு இருக்கு.. ஆனா வாலிபரை சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்ற பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தின் வேமுலவாடா பகுதியில் உள்ள வைகுண்ட தாம் சுடுகாட்டில் உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் மரிபள்ளி ராகேஷ் என்ற வாலிபரை அவரது குடும்பத்தினரே மரணத்திற்காகக் காத்திருக்க வைத்த நெஞ்சை உலுக்கும் கொடூரமானச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்துர்த்தி மண்டலம் கிஷ்டம்பேட்டைச் சேர்ந்த அம்ருதா என்பவரது குடும்பத்தினர் வறுமையின் காரணமாக வேமுலவாடாவில் ஒரு சிறிய குடிசையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான ராகேஷ் கடந்த சில காலமாகத் தீவிர மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்துள்ளார். பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் அவரது உடல்நிலை தேறாததாலும், மருத்துவச் செலவுகளைக் கவனிக்கப் பணம் இல்லாததாலும் குடும்பத்தினர் திகைத்து நின்றனர்.
வறுமையின் உச்சத்தில் தவித்த அந்தக் குடும்பத்திற்கு தங்குவதற்குக் கூடச் சொந்தமாக ஒரு கூரை இல்லாத நிலையில், இனி ராகேஷ் பிழைக்க மாட்டார் என முடிவு செய்து, அவர் உயிருடன் இருக்கும்போதே சுடுகாட்டிற்குத் தூக்கி வந்து படுக்க வைத்துள்ளனர். மருத்துவ வசதியோ, தங்குவதற்கு இடமோ இன்றிச் சுடுகாட்டில் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு அந்த வாலிபர் உயிருக்காகப் போராடி வரும் அவலக் காட்சி பார்ப்பவர் நெஞ்சைக் கரைய வைக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, அப்பகுதி மக்களும் தன்னார்வலர்களும் அந்தக் குடும்பத்திற்கு உதவவும், வாலிபரை மீண்டும் மருத்துவமனைக்கு மாற்றவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
