LATEST NEWS
“நான் ஜீரோ தான்”… ஆனால் என்னைப் பக்கத்தில் போட்டால்தான் மரியாதை தெரியுமா..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த சீமான் டுவிஸ்ட் பேச்சு..!!
நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை விமர்சிப்பவர்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். “நான் ஜீரோ தான்; என்னை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், எத்தனை எண்கள் இருந்தாலும் அதன் அருகே ஜீரோவைப் போட்டால்தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய சீமான், தமிழ்நாட்டில் உள்ள மக்களிடம் கருத்துகளைப் படித்துச் சொன்னால் யாரும் கேட்பதில்லை என்றும், நடித்துச் சொன்னால்தான் அனைவரும் கேட்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்டதால்தான் தானும் சினிமாவில் நடிக்கப் போய்விட்டதாக அவர் நகைச்சுவையாகவும், அரசியல் நையாண்டியுடனும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் தமிழகத்தின் ‘பிசி ஆர்ட்டிஸ்ட்’ நான் தான் என்றும் சீமான் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்று நெல்லையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சினிமா மற்றும் அரசியலை ஒப்பிட்டு சீமான் பேசிய இந்தக் கருத்துகள் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும், அரசியல் களத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
