LATEST NEWS
“இப்படியும் ஒரு திருமணமா..?” மாலை மாற்றும்போது வாரி இறைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்… கைகளால் அள்ள முடியாமல் கடைசியில் அங்கிருந்தவர்கள் செய்த அந்த ஒரு காரியம்.. அதிர்ச்சி சம்பவம்..!!
பல மாதங்களாகப் பேசுபொருளாக இருந்த பிரம்மாண்டத் திருமண விழா ஒன்றில், சுமார் 4 லட்சம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டதோடு, மாலை மாற்றும் சடங்கின்போது வாரி இறைக்கப்பட்ட பணத்தைக் கைகளால் அள்ள முடியாமல் துடைப்பத்தால் கூட்டிச் சேகரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவாங்கி என்பவரின் தந்தை தனது மகளின் திருமணத்தைக் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஒரு வரலாற்று நிகழ்வாக நடத்தி முடித்துள்ளார். நேற்றைய தினம் வெற்றிகரமாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் சுமார் 4 லட்சம் மக்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. குறிப்பாக, மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கின்போது, அளவுக்கு அதிகமாகப் பணத்தாள்கள் வாரி இறைக்கப்பட்டதால், தரையில் சிதறிய பணத்தைக் கைகளால் பொறுக்க முடியாமல் அங்கிருந்தவர்கள் துடைப்பத்தைக் கொண்டு கூட்டிச் சேகரித்த காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குதிரைப் பந்தயப் போட்டி, நேற்று அளவுக்கு அதிகமான கூட்டம் திரண்டதால் நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போட்டி இன்றைய தினம் நடைபெற உள்ளதாகவும், இதில் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளருக்குப் பரிசாக ‘மஹிந்திரா தார்’ கார் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன; அந்த அதிர்ஷ்டப் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
