மனிதாபிமானமற்ற வெறிச்செயல்.. கோடரியால் வெட்டிச் சாய்த்தும் ஆத்திரம் தீரலையா..? ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவருக்கு கும்பல் செய்த கொடூர காரியம்… ஷாக்கிங் வீடியோ..!!! – cinefeeds
Connect with us

CRIME

மனிதாபிமானமற்ற வெறிச்செயல்.. கோடரியால் வெட்டிச் சாய்த்தும் ஆத்திரம் தீரலையா..? ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவருக்கு கும்பல் செய்த கொடூர காரியம்… ஷாக்கிங் வீடியோ..!!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், முதியவர் ஒருவரைக் கோடரியால் கொடூரமாகத் தாக்கியதோடு, வலுக்கட்டாயமாக விஷம் குடிக்க வைத்த கொடூரச் சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜான்பூர் மாவட்டத்தின் பக்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்ஜி பகுதியில் வசித்து வந்தவர் முதியவர் ஓம்பிரகாஷ் சிங். இந்நிலையில், சரோஜ் என்பவரும் அவரது உறவினர்களும் சேர்ந்து ஓம்பிரகாஷ் சிங்கைக் கோடரியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, குற்றவாளிகள் வலுக்கட்டாயமாக விஷம் குடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து படுகாயமடைந்த ஓம்பிரகாஷ் சிங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 25-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in