அடிப்பாவி.. நள்ளிரவில் கண்விழித்த கணவன்… பக்கத்து அறையில் கள்ளக்காதலனுடன் ‘அந்த’ கோலத்தில் இருந்த மனைவி.. அடுத்த நாளே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!! – cinefeeds
Connect with us

CRIME

அடிப்பாவி.. நள்ளிரவில் கண்விழித்த கணவன்… பக்கத்து அறையில் கள்ளக்காதலனுடன் ‘அந்த’ கோலத்தில் இருந்த மனைவி.. அடுத்த நாளே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Published

on

பீகார் பாட்னாவின் பிஹ்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தௌலத்பூர் சிம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் முகமது இர்பான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஃபிர்தௌஸ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இர்பானுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தினமும் 18 மணி நேரம் வாடகை வாகனம் ஓட்டி, தனது மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இரவு பகலாக உழைத்து வந்தார். ஆனால், தனது அழகை கணவர் ரசிப்பதில்லை என்றும், தான் தனிமையில் இருப்பதாகவும் நினைத்த ஃபிர்தௌஸுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 22 வயதான கரண் குமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது.

இந்நிலையில், ஒருநாள் இரவு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வீடு திரும்பிய இர்பான், உடல் சோர்வால் தூங்கச் சென்றார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஃபிர்தௌஸ், மற்றொரு அறையில் கள்ளக்காதலன் கரண் குமாருடன் தனிமையில் இருந்துள்ளார். நள்ளிரவில் விழித்த இர்பான், மற்றொரு அறைக்குச் சென்று பார்த்தபோது தனது மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார். இதனைத் தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்ட நிலையில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட ஃபிர்தௌஸும் கரண் குமாரும் சதித்திட்டம் தீட்டினர்.

Advertisement

இதற்காகக் கூலிப்படையை அணுகிய இருவரும், இர்பானைக் கொலை செய்ய ரூ.40,000 பேரம் பேசி, முன்பணமாக ரூ.20,000 கொடுத்துள்ளனர்; இதற்கான பணத்தை ஃபிர்தௌஸ் தனது வங்கிக் கணக்கு மற்றும் கடன் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். திட்டமிட்டபடியே, கடந்த நவம்பர் 10-ஆம் தேதி இர்பான் தனது வீட்டிற்கு வெளியே நின்றிருந்தபோது கூலிப்படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த பாட்னா காவல்துறை மற்றும் தானாபூர் டி.எஸ்.பி. தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு, செல்போன் அழைப்புகள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் மூலம் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஃபிர்தௌஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஃபிர்தௌஸ், அவரது கள்ளக்காதலன் கரண் குமார் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்; தலைமறைவாக உள்ள கூலிப்படைக் கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in