கோர்ட் வாசலிலேயே பயங்கரம்… கொலைக் குற்றவாளியின் கையை துண்டாக வெட்டிய கும்பல்… சிறையிலிருந்து வந்த 4-வது நாளில் அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

கோர்ட் வாசலிலேயே பயங்கரம்… கொலைக் குற்றவாளியின் கையை துண்டாக வெட்டிய கும்பல்… சிறையிலிருந்து வந்த 4-வது நாளில் அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சிவாஜிநகர் நீதிமன்றத்திற்கு வெளியே, கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கிவாலே என்ற நபரின் கையை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டித் துண்டித்துவிட்டுத் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு காரணமாக 26 வயதான உணவக உரிமையாளர் ஷுபம் சுபாஷ் சவான் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிவாலே, நான்கு நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த அவரை, இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காணொளி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கு துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு தங்களது ஸ்கூட்டர்களில் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

Advertisement

படுகாயமடைந்த கிவாலே உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்; பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறியுள்ள இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in