இப்படியொரு தந்தையா..? “நான் இறந்த பிறகு என் மகளுக்கு எந்தச் சுமையும் இருக்கக் கூடாது!” – உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது முதியவர்.. வியக்கவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படியொரு தந்தையா..? “நான் இறந்த பிறகு என் மகளுக்கு எந்தச் சுமையும் இருக்கக் கூடாது!” – உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது முதியவர்.. வியக்கவைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மறைவுக்குப் பிறகு மகளுக்கு எந்தவிதப் பொருளாதார சுமையையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான 13-ம் நாள் இறுதிச் சடங்கை நடத்தி முடித்துள்ளார். பரவுத் தாலுகாவிற்கு உட்பட்ட ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த சவுத்ரி பல்ஜோர் சிங் என்ற அந்த முதியவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாத நிலையில், பிங்கி என்ற ஒரே மகளுக்குப் பிற்காலத்தில் சுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த விநோத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது இல்லத்தில் பாரம்பரிய முறைப்படி யாகம் வளர்த்து சடங்குகள் செய்த பல்ஜோர் சிங், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 900 பேருக்கு பிரம்மாண்டமான மதிய விருந்து அளித்துள்ளார். இதற்காக 8 சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன. மேலும், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தனது 10 வயதுப் பேரன் முகுலுக்குத் தலைப்பாகை அணிவித்து குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்த அவர், தனக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தையும் பேரன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.

Advertisement

தந்தையின் இந்த வித்தியாசமான செயலால் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், அவரது இறுதி விருப்பம் நிறைவேறியதில் தங்களுக்கு மகிழ்ச்சியே இருப்பதாகவும் அவரது மகள் பிங்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தன் கண் முன்பாகவே தன் குடும்பத்தினரும் ஊர்மக்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in