LATEST NEWS
“முதல்வர் விஜய்க்கு திடீர் சிக்கல்…” 48 மணி நேரம்தான் கெடு… திருப்பதியில் இருந்து பறந்த அதிரடி வக்கீல் நோட்டீஸ்..!!
திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி தரப்பில் இருந்து முதல்வர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது குறித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய பதில் அளிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
