“தமிழர் மரபைக் காத்த முதல்வர் விஜய்..” திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசுக்குக் கூட்டணிக் கட்சிகள் சல்யூட்.. குவியும் பாராட்டு மழை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தமிழர் மரபைக் காத்த முதல்வர் விஜய்..” திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசுக்குக் கூட்டணிக் கட்சிகள் சல்யூட்.. குவியும் பாராட்டு மழை..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்தபோதிலும், அது சர்வே கல் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக நின்றது. இதன் காரணமாக, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறைப்படியே உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட முயன்றனர்; மேலும், இவ்விவகாரத்தில் அரசு வரும் நாட்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மரபையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்ததாகக் கூறி, கூட்டணிக் கட்சிகள் முதல்வர் விஜய் தலைமையிலான அரசைப் பாராட்டியுள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அழுத்தங்களுக்கு அடிபணியாமல் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தலையீடு அதிகார துஷ்பிரயோகம் என்றும், மதவெறி சக்திகளின் சதிச் செயல்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சங்பரிவார்களின் வலைப்பின்னல் அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, தமிழர் மரபையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பதற்றத்தை உருவாக்க முயன்றபோதிலும், எவ்வித சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையுமின்றி அமைதியை நிலைநாட்டிய மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசின் நடவடிக்கைகளுக்குக் காங்கிரஸ் என்றும் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றத்தை முன்வைத்துப் பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற சங் பரிவார் கும்பலை, முந்தைய அரசை விட மிகச் சிறப்பாக #தவெக அரசு கையாண்டுள்ளதாகப் பாராட்டியுள்ளார். மதச்சார்பின்மையையும் இந்துக்களின் உணர்வையும் ஒருசேர நிலைநிறுத்திய முதல்வர் விஜய் அவர்களுக்கும், இவ்விவகாரத்தில் உறுதுணையாக இருந்து நீதியை நிலைநாட்டிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in