LATEST NEWS
“அது வேஷம் அல்ல.. பாசம்…” காலணி அணியாமல் உடலைச் சுமந்த விஜய்… அரசியல் தாண்டி பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!
மறைந்த வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடலைக் காலணி அணியாமல் முதல்வர் விஜய் சுமந்து சென்ற நிகழ்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காலணி அணியாமல் வி.எஸ்.பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்றதை ஒருபோதும் வேஷம் என்று சொல்லக்கூடாது என்றும், அது அவர் மீது கொண்ட உண்மையான பாசத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தனது எதிர்பார்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மறைந்த வி.எஸ்.பாபுவுக்குக் கிடைத்த அதே இறுதி மரியாதை, இந்த 41 பேருக்கும் கிடைத்திருந்தால் முதல்வர் விஜய் ஒருவேளை இறைவனுக்கு நிகராகப் போற்றப்பட்டிருப்பாரோ என்றுதான் இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தனது இந்தக் கருத்து அரசியல் ரீதியான விமர்சனமாகப் பார்க்கப்படக் கூடாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “இது விமர்சனம் அல்ல, ஒரு எதிர்பார்ப்பு” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
