LATEST NEWS
“பாஜக அரசுதான் கர்நாடகாவைத் தூண்டுகிறது..” வெளிப்படையாக அனுமதி கொடுக்க பயந்து மறைமுகமாகப் பச்சைக்கொடி காட்டுகிறது… மேகதாது விவகாரத்தில் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு..!!
“மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இருப்பதாகக் கூறும் அம்மாநில முதலமைச்சர் சிவக்குமாரின் பேச்சு, அவரது அறியாமையா அல்லது ஆணவமா எனத் தெரியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் செல்வதைத் தடுக்கும் வகையில் கர்நாடகா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், சிவக்குமார் இவ்வாறு பேசி வருவதாக வைகோ குறிப்பிட்டார்.
மேலும், பாஜக அரசுதான் கர்நாடக அரசை அணை கட்டத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டிய வைகோ, வெளிப்படையாக அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழும் என்பதால், மத்திய அரசு மறைமுகமாக அணை கட்ட பச்சைக்கொடி காட்டுவதாகவும் தெரிவித்தார்.
