“ஆட்சிக்கு ஆபத்து” ரகுபதி கொளுத்திப் போட்ட திரி… தவெக எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்ற ரிசார்ட் பக்கம் ஒதுங்கிய முதல்வர் விஜய்..? வெளியான பரபரப்புத் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்சிக்கு ஆபத்து” ரகுபதி கொளுத்திப் போட்ட திரி… தவெக எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்ற ரிசார்ட் பக்கம் ஒதுங்கிய முதல்வர் விஜய்..? வெளியான பரபரப்புத் தகவல்..!!

Published

on

தவெக எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவத் தயாராக இருப்பதாக திமுக மூத்த தலைவர் ரகுபதி சமீபத்தில் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தனது தலைமையிலான ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முக்கிய நடவடிக்கையாக முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திடீரெனச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ரகசியச் சந்திப்பின்போது, எம்.எல்.ஏ-க்களின் தொகுதி சார்ந்த குறைகள் மற்றும் தனிப்பட்ட அதிருப்திகளை முதலமைச்சர் விஜய் பொறுமையாகக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும், கட்சிக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்துவது குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெறலாம் என்ற அச்சமே, எம்.எல்.ஏ-க்களை ஒரே இடத்தில் அழைத்துப் பேசிய இந்த ரிசார்ட் சந்திப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in