“Bro விஜய் விசிட் டோட்டல் ஃபெயிலியர்..” 10 கோடி பந்தல் போட்டு ஏமாத்திட்டாங்க… அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாய்ந்த ரகுபதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Bro விஜய் விசிட் டோட்டல் ஃபெயிலியர்..” 10 கோடி பந்தல் போட்டு ஏமாத்திட்டாங்க… அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாய்ந்த ரகுபதி..!!

Published

on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தவெக அரசு குறித்தும் விராலிமலை இடைத்தேர்தல் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை வந்த CM சார் “Bro விஜய்”, புதுக்கோட்டை மக்களுக்கு புதிய திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் அமைதியாக இருக்கும் நிகழ்ச்சியாகவே அது அமைந்ததாகக் கூறினார். மேலும், ஜோசியர் இடம் சரியில்லை எனக் கூறியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், வழியில் 10 கோடி ரூபாயில் 45 கிலோமீட்டருக்கு பேரிகேட் போட்டு, நடக்காத நிகழ்ச்சிக்கு பிரம்மாண்டமாக பந்தல் அமைத்ததைத் தவிர வேறொன்றும் நடைபெறவில்லை என்றும், இந்த விசிட் ஒரு ஃபெயிலியர் விசிட் என்றும் சாடினார்.

தொடர்ந்து பேசிய ரகுபதி, முதல்வர் வருகையின் போது கலைஞர் கருணாநிதி மகளிர் கல்லூரியில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு, “நண்பா நண்பீஸ்” அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒத்திவைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். ஆனால், அதே தேதியில் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் தேர்வு நடைபெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வரைப் பார்ப்பதற்காக ஒரு கல்லூரியில் தேர்வை ஒத்திவைப்பதா எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன், புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இறுதியாக, விராலிமலை இடைத்தேர்தல் தொடர்பாகப் பேசிய அவர், விராலிமலையில் தேர்தல் தேதியோ அல்லது வேட்பாளரோ அறிவிக்கப்படாத நிலையிலும், இடைத்தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளி பரிசாக ஒரு வீட்டிற்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள இனிப்பு, டம்ளர் போன்ற பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். வாக்குக்கு எதுவும் கொடுக்கமாட்டோம் என்று கூறும் தூய ஆட்சியில், 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தவறாமல் பொருட்களையும், மற்றவர்களுக்கு ரொக்கத்தையும் வழங்கி வருவதாகத் தெரிவித்த ரகுபதி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என தப்புக் கணக்கு போடுவதாக விமர்சித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in