“தவெக MLA-க்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்..” காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்..? கள்ளக்குறிச்சிக்கு பின் துறையூர் ரவி சங்கர் மீது பாயும் அதிமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெக MLA-க்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்..” காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்..? கள்ளக்குறிச்சிக்கு பின் துறையூர் ரவி சங்கர் மீது பாயும் அதிமுக..!!

Published

on

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அடிதடி வழக்கு ஒன்றில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக-வின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அதிமுக நெருக்கடி கொடுத்து வருகிறது.

Advertisement

இந்த அடிதடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in