CRIME
“ஓடும் ரயிலில் பயங்கரம்..” பெண் பயணியை வெறித்தனமாக தாக்கிய RPF காவலர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ..!!
தர்பங்கா – அமிர்தசரஸ் இடையே இயக்கப்படும் ஜன் நாயக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நஜிபாபாத் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயணத்தின்போது ரயில்வே போலீசாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஏதோ ஒரு விஷயம் தொடர்பாகத் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த RPF பாதுகாப்புப் படை காவலர், பெண் என்றும் பாராமல் அந்தப் பயணியை ஈவு இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். ஓடும் ரயிலில் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, பெண் பயணி மீது இத்தகைய வன்முறையில் ஈடுபட்டது சக பயணிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது; இது தொடர்பான காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகின்றன.
