LATEST NEWS
“ரியல் ஹீரோக்கு சல்யூட்..!” ஓடும் ரயிலிலிருந்து வலிப்பு வந்து விழப்போன பயணி.. அடுத்த நொடியே பயந்து வந்து பெண் காவலரின் நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் கோந்தியா ரயில் நிலையத்தில், பெண் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் தீபிகா பிசென் தனது துரிதமான செயல்பாடு மற்றும் வீரத்தால் ரயில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் நிலைதடுமாறி ரயில் பெட்டியின் வாசல் வழியாகக் கீழே விழத் தொடங்கினார். அப்போது அங்குப் பணியில் இருந்த தீபிகா, சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று, அந்தப் பயணியைப் பத்திரமாக நடைமேடைக்கு இழுத்துக் காப்பாற்றினார்.
‘ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துணிச்சலான மீட்புப் பணியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றன. நொடிப்பொழுதில் செயல்பட்டுப் பயணியின் உயிரைக் காப்பாற்றிய காவலர் தீபிகாவின் அசாத்தியத் துணிச்சலையும், கடமை உணர்வையும் ரயில்வே பாதுகாப்புப் படையின் நாக்பூர் கோட்டம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
