LATEST NEWS
வழியனுப்ப வந்தது ஒரு குத்தமா..? “டிரெயினுக்குள்ள ஏறி ‘டாட்டா’ காட்டப் போன 12 பேர்.. திடீரென லாக் ஆன கதவு.. 140 கி.மீ தூரம் பயணித்ததால் ஆப்பு வைத்த ரயில்வே நிர்வாகம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்களது உறவினர்களை வழியனுப்பச் சென்ற 12 பேர், ரயிலின் தானியங்கி கதவுகள் மூடியதால் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக் கொண்டனர். ரயில் புறப்பட்டதால் அவர்களால் உடனடியாக இறங்க முடியவில்லை, இதனால் அவர்கள் சுமார் 140 கி.மீ தூரம் பயணிக்க நேரிட்டது.
ரயில் எட்டாவா சந்திப்புக்கு வந்தடைந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல் அதிகாரிகள் இணைந்து அவர்கள் 12 பேரையும் பாதுகாப்பாக கீழே இறக்கினர். உரிய பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் ஏறியதற்காகவும், பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டதற்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 36,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரயில்களில் முறையான அனுமதியின்றி அல்லது செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் ஏறக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அந்த 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். நவீன ரயில்களின் தானியங்கி கதவுகள் மற்றும் பயண விதிகளைப் பயணிகள் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
