உச்சகட்ட பரபரப்பு..! ஆட்சியைக் கலைக்க திமுக – அதிமுக மறைமுகக் கூட்டணி..? டெல்லிக்குப் பறந்த ஆதவ் அர்ஜுனா… பின்னணியில் நடந்த அதிரடி மூவ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சகட்ட பரபரப்பு..! ஆட்சியைக் கலைக்க திமுக – அதிமுக மறைமுகக் கூட்டணி..? டெல்லிக்குப் பறந்த ஆதவ் அர்ஜுனா… பின்னணியில் நடந்த அதிரடி மூவ்..!!

Published

on

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுகப் புரிதல் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது . விரைவில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என ஸ்டாலின் சவால் விடுத்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூடும்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருவதாக போன்ற ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அரசியல் நெருக்கடியை முறியடிக்கவும், சட்டப்பேரவையில் தவெக அரசின் பெரும்பான்மையைத் தக்கவைக்கவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவசரப் பயணமாக டெல்லி சென்று முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி ஆகியோரை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

Advertisement

தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகள், சமீபகாலமாக அரசின் சில செயல்பாடுகளை விமர்சித்து வந்ததுடன், முதல்வர் விஜய் நடத்திய கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சியை முறியடிக்க இடதுசாரிகளின் ஆதரவு அவசியம் என்பதால், ஆட்சிக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்குமாறும் கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் தேசியத் தலைமையிடம் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in