என்னம்மா கண்ணு சௌக்கியமா..? “காங்கிரஸைத்தான் நம்பி.. ஓ ஓ பயனில்ல தம்பி” விஜய் – ராகுல் கூட்டணியைக் குறிவைத்து பாஜக கிண்டல்… பதிலடி கொடுக்குமா த.வெ.க ஐடி விங்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னம்மா கண்ணு சௌக்கியமா..? “காங்கிரஸைத்தான் நம்பி.. ஓ ஓ பயனில்ல தம்பி” விஜய் – ராகுல் கூட்டணியைக் குறிவைத்து பாஜக கிண்டல்… பதிலடி கொடுக்குமா த.வெ.க ஐடி விங்..?

Published

on

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்து 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், த.வெ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து தமிழ்நாடு பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் புதிய ஏஐ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னம்மா கண்ணு சௌக்கியமா” என்ற பாடலைப் பகடி செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், “காங்கிரஸைத்தான் நம்பி ஓ ஓ பயனில்ல தம்பி” என்ற வரிகளுடன் இரு கட்சிகளின் கூட்டணியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் விமர்சிக்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் வாக்குறுதிகள், டெல்லி போராட்டங்கள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் மெத் கடத்தல், குழந்தைகள் கடத்தல் விவகாரங்களில் முதல்வர் மௌனம் காப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக திருவிளையாடல் பட வசனத்தை ஏஐ மூலம் மாற்றி த.வெ.க அமைச்சர்களை விமர்சித்து பாஜக வெளியிட்ட வீடியோ தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தது.

Advertisement

தி.மு.க, அ.தி.மு.க மற்றும் நா.த.க உள்ளிட்ட கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் த.வெ.க ஐடி விங் , பாஜகவின் அடுத்தடுத்த ஏஐ வீடியோக்களுக்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது. பாஜகவைக் கண்டு த.வெ.க அஞ்சுகிறதா என எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தப் புதிய வீடியோவுக்காவது த.வெ.க ஐடி விங் பதிலளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in