“இவங்களாம் ஒரு ஆசிரியரா..?” அழுதபடியே வீடு திரும்பிய 3 வயது ப்ரீகேஜி சிறுவன்.. சிசிடிவியை பார்த்து அதிர்ந்து போன தந்தை.. பள்ளியில் நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவங்களாம் ஒரு ஆசிரியரா..?” அழுதபடியே வீடு திரும்பிய 3 வயது ப்ரீகேஜி சிறுவன்.. சிசிடிவியை பார்த்து அதிர்ந்து போன தந்தை.. பள்ளியில் நேர்ந்த கொடூரம்..!!

Published

on

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மகிமா என்ற மனைவியும், சர்வீன் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இவரது மகன் ப்ரீகேஜி படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (16.11.2026) பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் கன்னம் மற்றும் உடலில் காயங்கள் இருந்துள்ளன. மேலும், சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார்.

இதுகுறித்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தபோது, ஆசிரியர் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளிக்குச் சென்ற தந்தை கோபிநாத், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, சிறுவனை நைலான் கயிற்றால் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தச் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.

Advertisement

இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் செல்வி ஆகிய இருவர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரையும் தேடி வருகின்றனர். மூன்று வயது ப்ரீகேஜி மாணவன் பள்ளியில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in