‘பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகளை , பிளான் போட்டு பாலியலில் ஈடுபடவைத்த ஆட்டோ டிரைவர்கள்’…சென்னையில் நடந்த அதிர்ச்சி! - cinefeeds
Connect with us

TRENDING

‘பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகளை , பிளான் போட்டு பாலியலில் ஈடுபடவைத்த ஆட்டோ டிரைவர்கள்’…சென்னையில் நடந்த அதிர்ச்சி!

Published

on

சென்னையில் தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேர் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்ததால் ஆசிரியர் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வராமல் வகுப்பிற்கு வடுரக்கூடாது என கூறியுள்ளார். மறுநாள் மூன்று பேரும், வகுப்பில் ஆசிரியர் கூறிய எதையும் பெற்றோரிடம் கூறாமல், பள்ளி சீருடையை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லமால் சுற்றி திரிந்துள்ளார்கள். அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கல் கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரும் மாணவிகள் மூவரையும் கண்காணித்துள்ளார்கள். அப்போது மாணவிகளிடம் சென்று பேச்சு கொடுத்த இருவரிடமும் மாணவிகள் மூவாறும் பேசியுள்ளார்கள்.

‘பக்கத்தில் ஒரு பீச் இருக்கு நல்ல இருக்கும் போகலாம்’ எனமாணவிகளை அருகில் இருந்த கடற்கரைக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு கடற்கரையில் நன்றாக விளையாடிய மாணவிகள் மூவரும் பள்ளி முடியும் நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.  மறுநாளும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட மாணவிகள் மூவரும், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருடனும் தியேட்டருக்கு சென்றுவிட்டு பள்ளி விடும் நேரத்திற்கு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை, ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும் என மாணவிகள் அச்சமடைந்துள்ளார்கள். இதனை அறிந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இருவரும், நாம் எங்கேயாவது வெளியூர் சென்றுவிடலாம், அங்கு சென்று திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்கள்.

Advertisement

இதனை நம்பிய அவர்கள், மறுநாள் 3 மாணவிகளில் 2 பேர் அவர்களுடன் சென்றுள்ளனர். பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டார்கள். முதலில் பள்ளிக்கு செல்லாமல் அவர்களுடன் சுற்றித் திரிந்த மற்றொரு மாணவியிடம் விசாரிக்க அவர் அனைத்து உண்மைகளையும் கூறினார். துரைப்பாக்கம் பகுதியில் மாணவிகள் இருவரும் ஆட்டோவில் ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து உறுதிப்படுத்திய போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் மற்றும் விஜயக்குமார்  இருவரது செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்தனர்.

மாணவிகளை கும்பகோணம் அழைத்துச் சென்ற இருவரும் கோயிலில் வைத்து தாலி கட்டி அங்கிருந்து திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர். இதனை உறுதி செய்த காவல்துறையினர், திருப்பூர் விரைந்து அங்கு விடுதியொன்றில் தங்கியிருந்த சிறுமிகளை மீட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர். 25 வயதான கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன், 19 வயதான விஜயக்குமார் , மாணவிகள் இருவரிடம் திருமண ஆசை காட்டி அவர்களை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.  இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement

.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in