இந்த 3 விஷயங்களுக்காக பணத்தை தாராளமா செலவு பண்ணுங்க… தப்பே கிடையாது, சிக்கனத்தை வலியுறுத்தும் சாணக்கியரே இப்படி சொல்லிட்டாரே? – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த 3 விஷயங்களுக்காக பணத்தை தாராளமா செலவு பண்ணுங்க… தப்பே கிடையாது, சிக்கனத்தை வலியுறுத்தும் சாணக்கியரே இப்படி சொல்லிட்டாரே?

Published

on

money

இன்றைய மனித வாழ்க்கையை தீர்மானிப்பது பணம் என்பதுதான் கசப்பான உண்மை. அதனால் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த பணத்தை சிக்கனமாக செலவழிப்பதும்தான். சிலர் பணம் இருக்கும்போது ஆடம்பரமாக ஊதாரித்தனமாக தேவையின்றி செலவு செய்துவிட்டு பிறகு பணம் எல்லாம் இழந்த பிறகுதான் பாடம் கற்றுக்கொள்வார்கள்.

அதனால் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யக் கூடாது. ஆனால் அதே நேரத்தில் அந்த பணத்தை சரியான இடங்களில் முதலீடு செய்தால் அது ஒருவரின் வாழ்க்கையை வளமாக்கி மகிழ்ச்சியை கொண்டு வரும். அதனால் வாழ்க்கையில் 3 விஷயங்களுக்காக பணத்தை தாராளமாக செலவு செய்யலாம். அந்த இடங்களில் சிக்கனமே தேவை இல்லை என்கிறார் சாணக்கியர்.

Advertisement

கல்வி – கல்விக்காக செலவிடும் பணம் ஒருபோதும் வீணாகாது. பணம் சொத்து மற்ற செல்வங்கள் கூட காலப்போக்கில் நம்மை விட்டு போகலாம். ஆனால் கல்வி அறிவு ஒரு மனிதருடன் எப்போதும் நிலைத்திருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் புத்தகங்கள் படிப்பதற்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் வெற்றிக்கும் புதிய வாய்ப்புகளுக்கும் வழிகாட்டும். அதனால் சாணக்கியர் கல்வியை மிக மதிப்புமிக்க முதலீடு என்கிறார்.

தானம் தர்மம் செய்தல் – சாணக்கிய நீதியின் படி தானம் மற்றும் தர்மமாக செலவிடும் பணம் ஒருபோதும் வீணாகாது. தேவைப்படுபவர்களுக்கு உதவுவது ஒரு சமூக கடமை மட்டுமல்ல, அது மனித விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு கருவியும் கூட. பிறர் நலனுக்காக செலவிடும் பணம் ஒருவரின் குணத்தை மேம்படுத்துகிறது. மேலும் அது அவர்களின் வாழ்க்கையில் நல்ல உறவுகளுக்கும் நல்லிணக்கத்திற்கும் அடித்தளம் அமைக்கிறது.

Advertisement

உடல் ஆரோக்கியம் – ஆரோக்கியத்தை வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்தாக சாணக்கியர் கருதினார். உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் செல்வம் அந்தஸ்து வெற்றி ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சி முழுமை அடையாது. சத்தான உணவு சீரான மருத்துவ பரிசோதனைகள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக செலவிடும் பணம் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரு சிறந்த முதலீடு என்றும் சாணக்கிய நீதி கூறுகிறது.

ஆரோக்கியமான ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் சவால்களை சிறப்பாக எதிர் கொள்ள முடியும். ஜெயிக்க முடியும் என்று சாணக்கியர் கூறியிருக்கிறார். அதனால் கல்வி கற்றல், ஏழை எளியவர்களுக்கு தானம் தர்மம் செய்தல், உடல் ஆரோக்கியம் சார்ந்து செய்யும் செலவுகள் ஆகிய 3 விஷயங்களுக்காக பணம் செலவு செய்ய எப்போதும் தயங்கவே கூடாது என்று சாணக்கியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in