LifeStyle
மன அழுத்தம் பாதிப்பால் அடிக்கடி சோர்வடைகிறீர்களா? இந்த விஷயங்களை மட்டும் பாலோ – அப் பண்ணுங்க, மன அழுத்தம் உங்களை விட்டு ஓடியே போயிடும்!
பணிச்சுமை குடும்ப சூழல் பொருளாதார நெருக்கடி உடல் நலக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் மனிதர்கள் அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டு சோர்வடைகின்றனர். மன அழுத்தத்தை சமாளிக்க வாழ்க்கையை அமைதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். நிம்மதியான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பயனுள்ள விஷயங்களை பின்பற்றினால் மன அழுத்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? எந்த விஷயம் உங்களை அதிக அளவில் பாதிக்கிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். எந்த மாதிரியான பாதிப்புகளால் நீங்கள் அப்செட் ஆகிறீர்கள் என்ற விழிப்புணர்வு வரவேண்டும்.
மன அழுத்தத்தை குறைப்பதற்கான எளிமையான வழிகளில் ஒன்று உங்களுக்கு உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும். அதற்கு போதுமான நேரம் தூங்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வாத உணவுகளாலும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு மன அழுத்தம் உண்டாகலாம்.
உங்கள் உடலை கவனமாக ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். நோயின்றி வாழ்வதற்கான சூழல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள்? அதற்கான தீர்வுகள் என்ன? எந்த விஷயங்கள் உங்களை அடிக்கடி பாதிப்படைய செய்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நடைபயிற்சி உடற்பயிற்சி தியானம் யோகா நண்பர்கள் சந்திப்பு இசை கேட்டல் பழைய சந்தோஷமான நினைவுகளை அசைபோடுதல் பயணங்கள் செய்தல் போன்ற விஷயங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுபட செய்யும். குறிப்பாக வெளியூர் பயணங்கள் சுற்றுலா செல்வது மன அழுத்தத்துக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தரும்.
