CINEMA
ஓடி ஓடி சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா…!”இத பண்ணுனா உங்க வாழ்க்கையே சொர்க்கமாயிடும்…!””உண்மையான சந்தோஷம் எதில் இருக்கு தெரியுமா…!இயக்குநராக இருந்த செல்வராகவன் ‘வாழ்க்கை ஆசிரியர்’ ஆனது எப்படி…!
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் செல்வராகவன். இவர் தனது தனித்துவமான படங்கள் மூலம் மட்டுமல்லாமல், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், தத்துவங்களையும் வீடியோக்களாக பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று, “உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது தெரியுமா?” என்ற கேள்வியோடு தொடங்கி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அவ்வீடியோவில் பேசிய செல்வராகவன், மனிதர்களின் பொருள் சார்ந்த ஆசைகள் தற்காலிகமானவை என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு நிலம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், வீட்டுக்குத் தேவையான பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் நிறைவேறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி சில நிமிடங்களே நீடிக்கும் என்றும், அதற்குப் பிறகு அதனுடன் சேர்ந்து புதிய பிரச்சனைகளும், கவலைகளும்தான் வரும் என்றும் அவர் யதார்த்தத்தை உடைத்து பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உண்மையான சந்தோஷம் என்பது குடும்பத்துக்குள், குறிப்பாக குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில்தான் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். “எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் விளையாடி, அவர்களுடைய உலகத்திற்குள் நுழைந்துவிட்டால் நம்முடைய பிரச்சனைகள் யாவும் மறந்துவிடும்; உலகமே வேற மாதிரி தெரியும்” என்று கூறியுள்ளார். அதேபோல் கணவன்-மனைவி உறவுக்குள் வீட்டுக் கணக்கு, பொறுப்புகளைத் தாண்டி, ஒருவருக்கொருவர் பிடித்த விஷயங்கள் மற்றும் ஆர்வங்கள் குறித்து மனம் திறந்து பேசினால் மட்டுமே உறவில் உண்மையான நெருக்கம் உருவாகும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இயந்திரமயமான இந்த வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருந்தால் மன அழுத்தம் மட்டுமே மிஞ்சும் என்றும், நிலைத்தன்மை இல்லாத வெளிப்புற விஷயங்களில் நிம்மதியைத் தேடாமல் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறும் என்றும் செல்வராகவன் தத்துவமாகப் பேசியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “தலைவா… நீங்க படம் எடுப்பதை விட இதுபோல பேசுவதுதான் தற்போதைய சூழலுக்கு ரொம்ப தேவை” என்றும், “நீங்கள் இயக்குநர் மட்டுமல்ல, வாழ்க்கை சொல்லித் தரும் ஆசிரியர்” என்றும் உணர்ச்சிபூர்வமாக தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
