CINEMA
மூக்குத்தி அம்மன் 2 படம் இந்த ஆண்டில் வெளிவராது – தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கும் இயக்குனருக்கும் அப்படி ஒரு மோதலா? புருஷன் படப்பிடிப்புக்கு தயாரான சுந்தர் சி!
இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி நடிகை குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திதா திருமணம் கோவாவில் நேற்று நடந்தது. இந்த திருமணத்துக்கு பிறகு சென்னை திரும்பும் இயக்குனர் சுந்தர் சி, விஷால் நடிப்பில் அவர் இயக்கி வரும் புருஷன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் சுந்தர் சி, அந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் புருஷன் படப்பிடிப்புக்கு செல்வது ஏன் என்ற கேள்விக்கு காரணமும் கிடைத்துள்ளது. அதாவது மூக்குத்தி அம்மன் 2 படத்தை பொருத்த வரை விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்காக சென்னையில் நார்த் ஸ்டுடியோ என்ற விஎஃப்எக்ஸ் நிறுவனத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக விஎஃப் எக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக 450 பேர் பணிசெய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு ரூ. 7 கோடி வரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தர வேண்டியுள்ளது.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து ரூ. 5 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனால் அந்த விஎஃப்எக்ஸ் நிறுவனம் கடும் அதிருப்தியில் உள்ளதாம். இந்த தகவல் இயக்குனர் சுந்தர் சி கவனத்துக்கும் சென்ற நிலையில் அவரும் பயங்கர அப்செட் ஆகியிருக்கிறார். இந்த விவகாரம் காரணமாக தான் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் புருஷன் படப்பிடிப்புக்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
