CINEMA
ஜூலை 23-ல் தமிழ்நாடே அதிரப்போகுது..! திருவிழாவா கொண்டாடுங்க.. “உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்கக்கூடாது” என தவெக மா.செ-க்களுக்கு அமைச்சர் ஆனந்த் போட்ட உத்தரவு…!!
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும் எனத் தமிழக அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி திரைப்படம் இது என்பதால், வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின் வெளியீட்டை மிகச் சிறப்பாகக் கொண்டாடக் கட்சி நிர்வாகிகளுக்குத் திட்டவட்டமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் என். ஆனந்தின் பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்து கூற வந்த நிர்வாகிகளிடம் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி திரையரங்குகளை பிரம்மாண்டமாக அலங்கரிக்கவும், ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைக் காண்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து முடிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
