ஜூன் மாதமே எடுத்த முடிவு… துயரத்திலும் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்.. நெஞ்சை நெகிழ வைக்கும் பிரபல இயக்குநரின் செயல்..!! – cinefeeds
Connect with us

CINEMA

ஜூன் மாதமே எடுத்த முடிவு… துயரத்திலும் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்.. நெஞ்சை நெகிழ வைக்கும் பிரபல இயக்குநரின் செயல்..!!

Published

on

பிரபல திரைப்பட இயக்குநர் பிரதீப் மதுகுல்லாவின் மனைவியான தீப்தி ரெட்டி, திடீரென ஏற்பட்ட தீவிர உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தனர்.

கடந்த ஜூன் 18-ஆம் தேதியே தீப்தி ரெட்டி தானாகவே முன்வந்து தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான உறுதியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. கணவர் பிரதீப் மதுகுல்லா மற்றும் குடும்பத்தினர், தங்களுக்கு நேர்ந்த துயரத்தின் நடுவிலும் தீப்தி ரெட்டியின் கடைசி ஆசையை மதித்து உறுப்புதானத்திற்குப் பூரண சம்மதம் தெரிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஜீவன்தான் மற்றும் விராட் ஃபவுண்டேஷன் அமைப்புகளின் உதவியோடு, தீப்தி ரெட்டியின் இதயம், கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மரணத்தின் வாயிலிலும் மனிதநேயத்தை உணர்த்திய தீப்தி ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in