ஐயோ கொடுமையே… பூரிக்கட்டையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்..! 4 மாதத்தில் அரங்கேறிய கொடூரம்… நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கொடுமையே… பூரிக்கட்டையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்..! 4 மாதத்தில் அரங்கேறிய கொடூரம்… நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பாஹ்லிங்கம்ப்பள்ளி பகுதியில், 28 வயதான தேஜஸ்வி என்ற பெண் தனது சொந்தக் கணவராலேயே பூரிக்கட்டையால் அடித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குப்பால நரேந்தர் மற்றும் தேஜஸ்வி தம்பதியினர், தங்களது 5 வயது மகனுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பாஹ்லிங்கம்ப்பள்ளி பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். நரேந்தர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் தம்பதியினருக்கு இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நரேந்தர், வீட்டில் இருந்த சப்பாத்தி உருட்டும் பூரிக்கட்டையை எடுத்து மனைவியின் தலையில் பலமாகச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலை பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த தேஜஸ்வி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் சிக்கடப்பள்ளி காவல் ஆய்வாளர் எல். மதுபாபு தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக உடலை காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலிஸார், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in