CRIME
“அம்மா… தயவுசெய்து போகாதே..” டெலிவரி பாயுடன் கள்ளக்காதல்… கெஞ்சியும் கேட்காமல் வீட்டை விட்டுச் செல்ல முயன்ற தாய்.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்.. பகீர் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹன்மகொண்டா மாவட்டம் காசிபேட்டை பாலஜிநகர் பகுதியில், 40 வயதான உதாயஸ்ரீ என்ற பெண் தனது சொந்த மகனாலேயே கழுத்தறுத்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதாகர் என்பவரின் மனைவியான உதாயஸ்ரீக்கு, பிபிஏ படித்து வரும் துரைபாபு என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சோஷியல் மீடியாவில் தீவிரமாக இயங்கி வந்த உதாயஸ்ரீ, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்துள்ளார். அப்போது, ஆன்லைன் டெலிவரி பாயாகப் பணிபுரியும் கரீம்நகரைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில், அந்த நபர் உதாயஸ்ரீயைக் குடும்பத்தை விட்டு வெளியேறித் தன்னுடன் வந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை காலை உதாயஸ்ரீ வீட்டை விட்டுப் புறப்படத் தயாராகியுள்ளார். இதைப் பார்த்த அவரது கல்லூரி மகனான துரைபாபு, வேறு நபருடன் செல்ல வேண்டாம் எனத் தாயிடம் கதறி அழாத குறையாகக் கெஞ்சியுள்ளார். இருப்பினும், தாய் கேட்க மறுத்ததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற துரைபாபு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துப் பெற்ற தாயின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த மகன், நடந்த சம்பவத்தைக் குடும்பத்தினரிடம் கூறிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் மத்திய டிசிபி மற்றும் ஏசிபி தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மகனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
