“காதலனுடன் ஓட முயன்ற இளம்பெண்..” ரயில் ஏறுவதற்கு முன்பே நடந்த ட்விஸ்ட்.. நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய்ப் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“காதலனுடன் ஓட முயன்ற இளம்பெண்..” ரயில் ஏறுவதற்கு முன்பே நடந்த ட்விஸ்ட்.. நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய்ப் பரவும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள மிஸ்ரிக் ரயில் நிலையத்தில், காதலனுடன் ரயிலில் தப்பிச் செல்ல முயன்ற இளம்பெண்ணை அவரது சகோதரர்கள் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் வெளியூர் செல்ல அந்தப் பெண் திட்டமிட்டுள்ளார். ஆனால், இது குறித்துத் தெரிந்து கொண்ட அவரது தம்பி மற்றும் சகோதரர்கள், அவர்கள் ரயில் ஏறுவதற்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அந்தப் பெண்ணின் காதலன், சிறுவனான அந்தத் தம்பியை மிரட்டிப் பணிய வைக்க முயன்றுள்ளார். இதைக் கவனித்த ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டு, அந்த இளைஞரைக் கடுமையாகக் கண்டித்து அமைதியாக இருக்குமாறு எச்சரித்தனர். மிஸ்ரிக் ரயில் நிலையத்தில் நடந்த இந்த வாக்குவாதம் மற்றும் பரபரப்புக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in