CRIME
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸே இப்படிச் செய்யலாமா.?” நடுரோட்டில் பைக் ஓட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியைக் காவல்துறையினர் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தின் கட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டா நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ‘டயல் 112’ அவசரகாலக் காவல்துறை வாகனத்தில் இருந்த காவலர்கள், அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரைக் காலால் எட்டி உதைத்து நிலைதடுமாறி விழச் செய்ததோடு, காயமடைந்த அவருக்கு உதவாமல் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த முழுச் சம்பவமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறிய செயலால் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
